வள்ளியூரில் பிரேமலதா விஜயகாந்த்க்கு உற்சாக வரவேற்பு அளித்த தேமுதிகவினர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் “மக்களை தேடி மக்கள் தலைவர்” என்ற பெயரில் கேப்டன் ரத யாத்திரையை பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். இதன் நான்காம் கட்டப் பிரச்சாரமாக இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு வருகை தந்த கேப்டன் ரதத்திற்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வதந்திகளை நம்ப வேண்டாம்: கூட்டணி குறித்துத் தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை யூடியூப் அல்லது தொலைக்காட்சிகளில் வெளியாகும் தகவல்களைத் தொண்டர்கள் நம்ப வேண்டாம். கூட்டணி குறித்து கட்சி தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுவே எனது முடிவு என பேசிய பிரேமலதா தொகுதி நிலவரம் குறித்து பேசும்போது தாமிரபரணி கூட்டு குடி நீர் திட்டத்தை முறைப்படுத்தி தொகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப எந்த நிதியும் வசூல் செய்ய கூடாது. ராதாபுரம் தொகுதியிலிருந்து கல்குவாரியிலிருந்து விதிகளை மீறி கேரளாவிற்கு அதிகப்படியான கனிமவளங்கள் கடத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் இல்லை விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. கல்குவாரி மூலம் நடக்கக்கூடிய அவலத்தை சுட்டிக்காட்டியது தேமுதிக. திருநெல்வேலி அல்வாவை கேப்டன் விரும்பி சாப்பிடுவார் இங்கு இருக்கின்ற தாமிரபரணி நதி முற்றிலும் அசுத்தப்பட்டு முற்றிலும் சாக்கடையிலும் கழிவுகளும் கலக்கின்ற தாமிரபரணியை பார்க்கின்ற போது என் மனது மிக வேதனை அடைகிறது. இந்நிலைமாறனும் தாமிரபரணி நமது தாய்ப்பாலுக்கு இணையான குற்றமான தண்ணீராக நிச்சயம் மரணம் தாமிரபரணி தண்ணீர் தான் இங்கு இருக்கின்ற விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மனிதர்களுக்கும் ஆதாரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கழிவு நீர் கலக்கக்கூடிய தாமிரபரணி இல்லாமல் சுத்தமான சுகாதாரமான தாமிரபரணியை நிச்சயம் 2026 தேர்தலுக்குப் பிறகு தேசிய முற்போக்கு திராவிட கழகம் உங்களுக்காக நிச்சயமாக உழைத்து அதை முன்னேற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். நாளை எனது திருமண நாள். கேப்டன் மறைந்த பிறகு வரும் இந்த நாளில், அவரை நினைத்து நான் மவுன விரதம் இருக்கப்போகிறேன். எனவே நாளை ஒரு நாள் தொண்டர்கள் யாரும் என்னைச் சந்திக்க வந்து தொந்தரவு செய்ய வேண்டாம்." இந்த நிகழ்வின் போது பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தனது மகன்கள் குறித்துப் பேசியபோது, அருகில் இருந்த விஜய பிரபாகரன் கண் கலங்கியது அங்கிருந்தோரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Related Link 4 ஆண்டுகளாக தொடரும் ரஷ்யா - உக்ரைன்போர்