கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் பிடாரி அழகுநாச்சியம்மன் குருநாதர் கோவிலில் தூக்குத்தேர் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 28ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கோயில் திருவிழாவில் தூக்குத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது அம்மன் எழுந்தளிருய தேரினை, ஏராளமான பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.