அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் திமுககாரர் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை முதலமைச்சருடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டாலே அவர் திமுக காரரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.