தனது வழக்கை உடனடியாக முடித்து வைக்க வேண்டுமென கூறி, ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் மரத்தின் மீது ஏறிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செந்தில் என்பவரது மகன் இருசக்கர வாகன விபத்து ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கு வாலாஜாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை முடித்து வைக்க கோரி அவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.