சென்னை அருகே சோழிங்கநல்லூர் பகுதியில் ஐ.டி. ஊழியர் உட்பட பலரையும் கத்தியால் வெட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர். நள்ளிரவில் ஆட்டோவில் வந்து அராஜகத்தில் ஈடுபட்ட ஷெரீப், அப்துல் ரசாக், அப்பாஸ் ஷெரீப் மற்றும் ஒரு சிறார் ஆகியோரை தனிப்படை போலீஸார் 1 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.