திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே போலீஸ் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது நிலத்தை விற்க முடிவு செய்து திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்று ஒப்பந்தம் செய்துள்ளார். இதனிடையே சண்முகம் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் 6 வருடங்களுக்குப் பிறகு நிலத்தை கிரையம் செய்து கொள்வதாக தெரிவிக்க, ராமசாமி தற்போதைய மார்க்கெட் விலையை கொடுக்க கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் தனது நண்பர்களுடன் சேர்ந்து போலீசார் போன்று விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி கடத்திச் சென்று மீண்டும் அவர்களே விட்டுச் சென்றுள்ளனர்.