சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 560 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 16 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்றைய விலை நிலவரம்சென்னையில், இன்று ஜனவரி 24ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் ஒரு சவரனுக்கு 4,160 ரூபாய் அதிகரித்து உள்ளது.வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 355 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு வருவது, அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு சர்வதேச முதலீட்டாளர்களும், பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஜனவரி 22ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 215 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 345 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக இருந்தது. நேற்றைய தங்கம், வெள்ளிநேற்று, ஜனவரி 23ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்தது. ஒரு கிராமுக்கு 450 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. Related Link திக் திக் சஸ்பென்ஸில் பிரேமலதா