தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக கிலோ ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சந்தைக்கு குறைந்த அளவு பூக்கள் வந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறும் வியாபாரிகள், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவு பூக்கள் கொள்முதல் செய்யப்படுவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.