சென்னையில் இன்று, டிசம்பர் 18ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,520க்கு விற்பனை ஆனது.ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,440க்கு விற்பனை ஆனது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் டிசம்பர் 16ஆம் தேதி, ஆபரண தங்கம் ஒரு கிராம் 12,350 ரூபாய்க்கும், ஒரு சவரன் 98,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம், 211 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, டிசம்பர் 17ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் உயர்ந்து, 12,400 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து, 222 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும், ஒரு கிலோவுக்கு 11,000 ரூபாய் உயர்ந்து, 2.22 லட்சம் ரூபாயாக அதிகரித்தது. இந்நிலையில், இன்று டிசம்பர் 18ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,440க்கு விற்பனை ஆகிறது.வெள்ளி விலை நிலவரம்வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.224க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்த நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.24 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.தங்கத்தைப் போல் வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதுடன், அதன் மீதான முதலீடுகளும் குவிந்து வருவதே இதற்கு காரணம் என, நகை வியாபாரிகள் கூறி உள்ளனர்.