தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாதை பிரச்சனை காரணமாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஒரு சமூகத்தினர் ஒரு இடத்தில் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாகவே பிரச்சனை இருந்து வந்த நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை முடிவு எட்டப்படாததால் இரு தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டனர்.