டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதில் வெற்றி யாருக்கு என பேசக்கூடாது என்றும், மக்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.