சென்னை மதுரவாயலில் திடீரென சாலை உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. MMDA காலனி 2-வது பிரதான சாலையில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டன. இருப்பினும் சாலை உள்வாங்கியபடியே இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.