புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சிறுமி மாயமாகி 100 நாட்கள் ஆகியும்,சிறுமியை கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். வடுதாவயலை சேர்ந்த செல்லத்துரை-தேவிகா தம்பதியினரின் மகளான 12ஆம் வகுப்பு சிறுமி, கீரனூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோல்வியுற்ற பாடத்திற்கு மறுதேர்வு எழுத சென்ற நிலையில்,வீடு திரும்பவில்லை என தெரிகிறது. தமிழக அரசு தலையிட்டு தங்கள் பிள்ளையை கண்டுபிடித்து தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர்.