நள்ளிரவு வீடு புகுந்து மாற்றுத்திறனாளியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கும்பல். மகனை கொலை செய்ய வந்த இடத்தில் இளைஞர் இல்லாததால் அவரது தந்தையை கொலை செய்த கொடூரம். கொலை செய்ய வந்த கும்பலுக்கும் மாற்றுத்திறனாளியின் மகனுக்கும் என்ன முன்விரோதம்? கொலையாளிகள் பிடிபட்டார்களா? பின்னணி என்ன?கடந்த ஆண்டு நடந்த கபடி போட்டியில் தகராறுமதுரை, மேலூர் பக்கத்துல உள்ள வெள்ளரிப்பட்டி மலைநகரை சேர்ந்தவர்தான் மாற்றுத்திறனாளி ரவிச்சந்திரன். இவரால வெளிய எங்கயும் வேலைக்கு போக முடியாது. அதனால, பிளாக்ல மதுபானம் விற்பனை செஞ்சதா சொல்லப்படுது. இவரோட மகன் விஜியை கொல்லதான் அந்த கும்பல் ஸ்கெட்சே போட்ருக்காங்க. காரணம், கடந்த ஆண்டு நவம்பர் மாசம் ஊருக்குள்ள நடந்த கபடி போட்டியும், அந்த கபடி போட்டியில வந்த சண்டையும்தான். கபடி போட்டி நடந்துட்டு இருக்கப்ப விஜிக்கும், அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டிக்கும் அடிதடி நடந்துக்குது. விஜியோட டீம்ல இருந்தவங்க விளையாடுறப்ப மருதுபாண்டி டீம்ல உள்ளவங்க கிண்டல் பண்ணிருக்காங்க. அதேமாதிரி, மருதுபாண்டி டீம்ல உள்ளவங்க விளையாடுறப்ப விஜி டீம்ல உள்ளவங்க நக்கல் பண்ணிருக்காங்க. இந்த கிண்டல் அடிதடியா மாறி கபடி போட்டி களத்தையே களேபரமா மாத்திருக்கு. அதுக்குப்பிறகு ஆக்ரோஷமா ரெண்டு தரப்புல உள்ளவங்களும் அங்க இருந்து போய்ருக்காங்க.விஜி தரப்பினரிடம் விசாரணை செய்த போலீசார்இந்த சம்பவம் நடந்த ரெண்டு நாளைக்குப்பிறகு, மருதுபாண்டி கபடி விளையாடுற இடத்துல மர்மமான முறையில உயிரிழந்து கிடந்துருக்காரு. உடம்புல வெட்டுக் காயங்களோட கிடந்த மருதுபாண்டியோட சடலத்த மீட்டு விசாரணையில இறங்கிருக்காங்க போலீசார். அப்போ, கபடி போட்டியில நடந்த பிரச்சனைதான் இந்த கொலைக்கே காரணம்னு சொல்லிருக்காங்க மக்கள். ஆனா, விஜி தரப்புல உள்ளவங்க எங்களுக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமுமே இல்லனு சொன்னதாலவும், கொலை சம்மந்தமான எந்த ஆதாரமும் இல்லாததால அந்த கொலை வழக்கு விசாரணையிலதான் இருக்குது. விஜி வீட்டில் இல்லாததால்...இதுக்கு மத்தியிலதான், விஜியை கொல்றதுக்காக அவரோட வீட்டுக்கு நடுராத்திரி தன் கூட்டாளிகளோட போய்ருக்காரு மருதுபாண்டியோட நண்பர் விஜய் சுந்தர். ஆனா விஜி வீட்ல இல்ல. ஆனாலும், முன்வச்ச கால பின்வைக்க கூடாதுனு நினைச்ச கொலைகார கும்பல் விஜியோட அப்பா ரவிச்சந்திரனை வெட்டிக் கொலை செஞ்சிட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க. மருதுபாண்டி கொலைக்கு பழிக்குப்பழிதான் இந்த கொலை நடந்துருக்குதுனு சொல்லப்படுறதால, தப்பி ஓடுன விஜய் சுந்தரையும், அவனோட கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசி தேடிட்டு இருக்காங்க. Related Link 2 குடும்பங்களுக்கு இடையேயான பகை