பயங்கர ஆயுதங்களுடன் நண்பனின் வீட்டிற்கு சென்ற கும்பல். வீட்டிற்குள் சென்று கதவை அடைத்து கொண்ட நண்பன். கதவை உடைக்க முற்பட்ட கும்பலை தடுத்து நிறுத்திய தாய். தாயை வெட்டிக் கொன்ற கொடூரம். நண்பனின் தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டது ஏன்? கொலைக்கான பின்னணி என்ன?சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜான்சன் பேட்டை கிழக்கு தெரு பகுதியை சேந்த சின்னப்பிள்ளையோட மகன் தான் சின்னத்தம்பி. கிடைக்குற வேலைய செஞ்சுட்டு இருந்த சின்னத்தம்பி, வேண்டாத சேர்க்கையால மது போதைக்கு அடிமையாகிட்டாரு. இவரும் அதே ஏரியாவ சேந்த பரசுராமனும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ். ரெண்டு பேரும் ஒன்னா உட்காந்து குடிக்கிறது, போதையில அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க கூட சண்டை போடுறதுன்னு அதையே வழக்கமா வச்சுருந்துருக்காங்க.ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பரசுராமனும், சின்னத்தம்பியும் உட்காந்து குடிச்சுட்டு இருந்தாங்க. அப்ப போதையில ரெண்டு பேருக்கும் இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. இதனால கோபமான சின்னத்தம்பி, பயங்கர ஆயுதங்கள கொண்டு பரசுராமன அடிச்சே கொலை பண்ணிட்டாரு. இந்த விஷயத்த கேட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சின்னத்தம்பிய அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. இதுக்கிடையில பரசுராமன் உயிரிழந்ததை பார்த்து, சரவணன், பிரசன்னா உள்ளிட்ட 4 பேர் கதறி அழுதுருக்காங்க. அடுத்து அவரோட சடலத்துக்கு முன்னாடி நின்னு, உன்னை கொலை பண்ண சின்னத்தம்பிய, பழி தீர்க்காம விடமாட்டோம்ன்னு சபதம் எடுத்துருக்காங்க.இதுக்கிடையில கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்தம்பி பெயில்ல வெளியில வந்துருக்காரு. இத தெரிஞ்சுக்கிட்ட சரவணனும், பிரசன்னாவும் அவரோட நடமாட்டத்த கண்காணிச்சுட்டே இருந்துருக்காங்க. சின்னத்தம்பி எப்ப வீட்ட விட்டு வெளியில வரான், அவன் கூட ஆட்கள் யாரும் இருக்காங்களான்னு எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டே இருந்துருக்காங்க. ஜெயில்ல இருந்து வெளியில வந்ததுக்கு அப்புறம் சின்னத்தம்பி வீட்ல இருந்து அவ்வளவா வெளியில வர்றதே கிடையாதுன்னு கூறப்படுது. இதனால அவர நெருங்க முடியாம இருந்த அந்த கும்பல், சின்னத்தம்பிய வீட்டுக்குள்ள புகுந்து கொலை செய்யனும்ன்னு ஸ்கெட்ச் போட்ருக்காங்க.சம்பவத்தன்னைக்கு சின்னத்தம்பி வீட்ல இருந்தத தெரிஞ்சுக்கிட்ட அந்த கும்பல், பயங்கர ஆயுதங்களோட அவரோட தெருவுக்குள்ள புகுந்துருக்காங்க. அப்ப இதபாத்த சின்னத்தம்பியோட தாய் சின்னப்பிள்ளை அந்த கும்பல தடுத்துருக்காங்க. சின்னத்தம்பி வீட்டுக்குள்ள போய்ட்டு ஒளிஞ்சுக்கிட்டாரு. இதனால ஆத்திரமடைஞ்ச அந்த கும்பல் தாய் சின்னப்பிள்ளைய சரமாரியா வெட்டி கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. இந்த வழக்கு விசாரணைய துரிதப்படுத்தன போலீஸ் சின்னத்தம்பி மூலமா கொலையாளிகள் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு, அவங்கள தேடி அலைஞ்சுருக்காங்க. அப்ப கிராம மக்கள் சொன்ன தகவல வச்சு அதே ஏரியாவுல உள்ள ஒரு வீட்ல பதுங்கியிருந்த சரவணன், பிரச்னனாவ அரெஸ்ட் பண்ண போலீஸ் மற்ற ரெண்டு நபர்கள வலைவீசி தேடிட்டு இருக்காங்க.இதையும் பாருங்கள் - சம்பவ களமான கீழ்ப்பாக்கம் GH