எரிந்த தீயால் எழுந்த கரும்புகை : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் கிடங்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் குவியல் மூட்டைகளை அங்குள்ள தொழிலாளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது பிளாஸ்டிக் குவியலிலிருந்து லேசான தீயுடன் புகை வருவதை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள்ளாகவே தீ வேகமாக பரவத் துவங்கியது. இதனை எடுத்து வெப்படை குமாரபாளையம் தீயணைப்பு துறை வாகனம் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் மூலமாக தீயை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ வேக வேகமாக பரவி விண்ணை மட்டும் வகையில் புகை மண்டலம் வானம் முழுவதும் காட்சி அளித்தது. இதனால் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் என்ன ஏதுவென்று தெரிந்து கொள்வதற்காக தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்தனர் . முழுமையாக தீயணைக்கப்பட்ட பிறகு சேதம் குறித்த விவரங்கள் தெரியவரும் எனவும் மின்கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா எனவும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். Related Link கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மாசித் திருவிழா