மாடிப் படிக்கட்டில் வழுக்கி விழுந்து கூலித்தொழிலாளி, உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய குடும்பத்தினர். திருதிருவென முழித்துக் கொண்டிருந்த மருமகன் மீது சந்தேகமடைந்த போலீஸ். சடலத்தை போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வைத்த காவலர்கள். மாமனார் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த அதிர்ச்சி ரிப்போர்ட். விசாரணையில் மாமனாரை மருமகனே கட்டையால் அடித்துக் கொலை செய்தது அம்பலம். மாமனாரை மருமகன் கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன?கன்னியாகுமரியில உள்ள கல்லுக்கூட்டம் நெடுந்தாரவிளை கிராமத்தை சேர்ந்த ராஜா கூலி வேலை செஞ்சுட்டு இருந்தாரு. இவருக்கு ஆக்னஸ், ஏஞ்சலான்னு ரெண்டு மகள்கள் இருக்காங்க. ரெண்டு பேருக்கும் திருமணமாகிருச்சு. ராஜாவும் அவரோட மனைவியும் மூத்த மகள் ஆக்னஸ் குடும்பத்தோட வசிச்சுட்டு இருந்துருக்காங்க. ஆக்னஸோட கணவர் சசி, வெல்டிங் வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. ராஜாவுக்கும் மருமகன் ஆக்னஸ்க்கும் குடி பழக்கம் இருக்கு. முன்னாடியெல்லாம் வேலை முடிஞ்சு மதுபோதையில வீட்டுக்கு வர்ற ராஜா, தன்னோட மனைவி கிட்ட பிரச்னை பண்ணிட்டு இருந்துருக்காரு. இது சசி - ஆக்னஸ் தம்பதிக்கு சுத்தமா பிடிக்கல. குடி பழக்கத்த கைவிடச் சொல்லி ஆக்னஸ் தன்னோட தந்தை கிட்ட, பல முறை பேசி பாத்துருக்காங்க. ஆனா ராஜா கேக்குற மாதிரி தெரியல.கிறிஸ்துமஸ் பண்டிகை அன்னைக்கு ஆக்னஸ், தன்னோட கணவனுக்காக கறி விருந்து ஏற்பாடு பண்ணி, தாய் கூட சேந்து சாப்பிட உட்காந்துருக்காங்க. அப்ப ஃபுல் போதையில வீட்டுக்கு வந்த ராஜா, மருமகன் சசியவும், மகள் ஆக்னஸையும் தகாத வார்த்தையால பேசிருக்காரு. இதனால சசிக்கும் - ராஜாவுக்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. எங்க வீட்ல இருந்துக்கிட்டு, என் உழைப்புல சாப்பிடுட்டு என்னையவே தகாத வார்த்தையால திட்டுறிங்களான்னு ராஜா கிட்ட சண்டை போட்ருக்காரு சசி. ரெண்டு பேரோட சத்தத்த கேட்ட ஓடி வந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, அவங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்திருக்காங்க. ஆனா அப்பவும் திருந்தாத ராஜா மறுநாளும் ஃபுல் போதையில வீட்டுக்கு திரும்பி பிரச்னை பண்ணிருக்காரு.மகள் ஆக்னஸ, காது கூசுற அளவுக்கு திட்டுன ராஜா, அவங்கள போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. இதனால நேரா பெட்ரூமுக்கு போன ஆக்னஸ் எங்க அப்பா, என்ன தகாத வார்த்தைகளால திட்டி, என்னைய அடிக்குறாரு, எனக்கு பயமா இருக்குன்னு கணவர் சசி கிட்ட சொல்லிருக்காங்க. அப்ப சசி, எதுக்கு மாமா இப்படியெல்லாம் பண்றிங்க, குடிச்சுட்டு வீட்டுக்கு வராதிங்கன்னு சொன்னா, கேக்க மாட்டிங்களான்னு ராஜாவ திட்டிருக்காரு. ஆனா அத காது கொடுத்துக்கூட கேட்காத ராஜா, சசியவும் தகாத வார்த்தையால திட்டிருக்காரு. இதனால ரெண்டு பேருக்கு இடையில வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. அப்ப வெளியில் கிடந்த கட்டைய எடுத்துட்டு வந்த சசி, ராஜாவோட தலை, வயிறு, முகம்ன்னு எல்லா இடத்துலையும் அடிச்சுருக்காரு. இதுல வலி தாங்க முடியாத ராஜா, மயங்கி விழுந்துருக்காரு.அடுத்து ஆக்னஸ், அவங்க தாய், கணவர் சசின்னு எல்லாரும் தங்கை ஏஞ்சலாவோட வீட்டுக்கு போய்ருக்காங்க. இதுக்கிடையில ராஜா படிக்கட்டுல மயங்கி விழுந்து கிடந்தத பாத்த பக்கத்து வீட்டுக்காரங்க அவர மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. ஆனா அங்க ராஜா உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ். சசிய அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.