வீட்டில் இருந்து கேட்ட அழுகை சத்தம். கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறிய மனைவி, மாமியார். வழக்கையே திருப்பி போட்ட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட். கணவனை அடித்தே கொலை செய்து சடலத்தை தூக்கில் தொங்கவிட்டது விசாரணையில் அம்பலம். இளைஞரை, மனைவியும் மாமியாரும் சேர்ந்து அடித்தே கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?கிராம மக்கள் எல்லாரும் தங்களோட வீட்ல பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப திடீர்ன்னு சர்மிளா-ங்குற பொண்ணோட வீட்ல இருந்து அழுகை சத்தம் கேட்ருக்கு. சத்தத்த கேட்ட கிராம மக்கள் உடனே ஓடிப்போய் பாத்துருக்காங்க. அப்ப என் கணவன் விஜய் தூக்குமாட்டி தற்கொலை பண்ணிக்கிட்டாருன்னு சொல்லி அழுதுருக்காங்க சர்மிளா.நேத்து வரைக்கும் விஜய் நல்லா தான இருந்தாரு, எங்க கிட்ட கூட நல்லா பேசுனாரு, திடீர்ன்னு எப்படி தூக்குமாட்டி உயிரிழந்தாருன்னு கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கு. அப்ப அங்கருந்த ஒருத்தரு, போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிருக்காரு. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், விஜயோட சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து வீட்ல இருந்த சர்மிளா கிட்டயும் அவங்களோட தாய் கிட்டயும் போலீஸ் விசாரணையில இறங்குனாங்க.முதல்ல சர்மிளாவ தங்களோட கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க போலீஸ். அப்ப போலீஸ் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணா பதிலளிச்சுருக்காங்க. இதனால போலீஸ்க்கு சர்மிளா மேல டவுட் வந்துருக்கு. இதுக்கிடையில வெளியான போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல விஜய் உடம்புல அதிக காயங்கள் இருந்ததா குறிப்பிட்டு இருந்துச்சு. இதனால இத கொலைன்னு கன்பார்ம் பண்ண போலீஸ், மனைவி சர்மிளா கிட்ட தங்களோட பாணியில விசாரிக்க ஆரம்பிச்சாங்க. திருவண்ணாமலையில உள்ள சேத்துப்பட்டு பகுதிய சேந்த விஜய் லாரி டிரைவரா வேலை பாத்துட்டு இருந்தாரு. 5 வருஷத்துக்கு முன்னாடி இவரும் அதே கிராமத்த சேந்த இளம்பெண் சர்மிளாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இந்த தம்பதிக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. விஜய் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு போய்ட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு திரும்புவாராம்.கணவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம், சர்மிளா எந்நேரமும் ஃபோன்லையே மூழ்கிப் போய் கிடந்துருக்காங்க. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி விஜய் தன்னோட மனைவி சர்மிளாவுக்கு ஃபோன் பண்ணிருக்காரு. அப்ப ஃபோன் பிசின்னு வந்துருக்கு. அதுமட்டும் இல்லாம வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்புற கணவன் கிட்டயும், சர்மிளா சரியா பேசாம ஃபோனே கதின்னு கிடந்துருக்காங்க.இதனால மனைவி வேற யார் கூடவோ தகாத உறவுல இருக்குறதா நினைச்ச விஜய், சர்மிளா கூட அடிக்கடி சண்டை போட ஆரம்பிச்சுருக்காரு. நீ யார் கூடவோ தகாத உறவுல இருக்க, அதான் நீ என்ன அவாய்ட் பண்ற, நான் வீட்டுக்கு வந்தா கூட என்கூட பேச மாட்டங்குறன்னு திட்டிருக்காரு. அதுக்கு மனைவி நான் உங்களுக்கு உண்மையா தான் இருக்கேன், நீங்க தான் தேவை இல்லாம என்ன சந்தேகப்படுறிங்கன்னு பதில் சொல்லிருக்காங்க. இதனால கணவன் - மனைவிக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கு.அன்னையில இருந்து விஜய், மனைவி சர்மிளாவ அடிச்சு சித்ரவதை பண்ணிட்டு இருந்துருக்காரு.சம்பவத்தன்னைக்கு நைட்டு வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்புன விஜய், மறுபடியும் மனைவிய போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. அப்ப வீட்ல சர்மிளாவோட தாய் ராணி பாத்திமாவும் உடன் இருந்துருக்காங்க. மகள் அடிவாங்குறத பாத்து கோபத்தோட உச்சத்துக்கே போன தாய், அங்க கிடந்த கட்டைய வச்சு மருமகன போட்டு சரமாரியா அடிச்சுருக்காங்க. தாய் கூட சேந்து சர்மிளாவும் தாக்குனதுல, விஜய்க்கு தலையில பலத்த காயம் ஏற்பட்டிருக்கு.இதுல நிலைகுலைஞ்ச விஜய் சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாரு. அடுத்து சடலத்த என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்த ரெண்டு பேரும், விஜயோட கழுத்துல கயிற்ற கட்டி தூக்குல தொங்க விட்ருக்காங்க.அடுத்து அக்கம் பக்கத்தினர் கிட்ட விஜய் தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிக்கிட்டதா நாடகமாடிருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், தீர விசாரணை பண்ணி விஜயோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ட வச்சும், சர்மிளா முன்னுக்கு பின் முரணாக அளிச்ச பதில வச்சும் அவங்க தான் உண்மை கொலையாளின்னு கன்பார்ம் பண்ண, சர்மிளாவையும், அவங்க தாய் ராணி பாத்திமாவையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க... இதையும் பாருங்கள் - வன்கொடுமை செய்து சிறுமி கொ*ல, கனமழையால் வெளியே தெரிந்த 'சடலம்' | CrimeNews |