தூத்துக்குடி மாவட்டம் புதூர் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயற்பியல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மாணவிகளை சிலர் தூண்டிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இயற்பியல் ஆசிரியர் தியகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளித்ததையடுத்து அவர்மீது போக்சோ பிரிவிலும், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான தியாகராஜனை போலீசார் தேடி வரும் நிலையில், அவர்களுக்கு வேண்டப்பட்ட சிலரின் தூண்டுதலால் மாணவிகள் போராட்டம் நடத்தியதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.