விலையில்லா மடிக்கணினிகள் வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணிமேரி கல்லூரி மாணவிகள் நன்றி தெரிவித்தனர். அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையிலுள்ள ராணி மேரி கல்லூரிக்கு, நேரில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ரோஜா பூ கொடுத்து வரவேற்றதோடு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.