வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் திருடிய இடத்திலேயே மீண்டும் வந்து சிக்கிய திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காட்பாடி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்து வந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்து தப்பி சென்றுள்ளார்.பின்னர் அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பதும், கடந்த 2024 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் வீட்டில் பணம், நகையை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மீண்டும் அதே பகுதியில் திருட நோட்டமிட்டு வந்த போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.