திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கிராமங்களில் பெய்த கனமழையால் புலி பிடித்த ஓடையில் உடைப்பு ஏற்பட்டதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததாக கூறப்படும் புலி பிடித்த ஓடை என்ற நீர்தேக்கத்தில் கரை உடைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறியது. இதனால் கீழானவயல் பகுதியிலிருந்து மன்னவனூர் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் கீழானவயல் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.