கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே வரகானப்பள்ளி பகுதியில் சாலையோர கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒசூர் நெசவாளர் தெருவை சேர்ந்த சரண் மற்றும் சென்னையை சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரும் ராயக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் டாட்டா தொழிற்சாலையில் பணி முடிந்து, வீட்டிற்கு திரும்பிய போது, கம்பத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில், சரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.