ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரைக்குடியிலிருந்து ஆவின் பால் ஏற்றிக்கொண்டு வந்த வேன் சின்கீரமங்கலத்தில் பாலை இறக்கிவிட்டு கல்லூர் - மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது சாலையில் நடுவே ஆடுகள் வருவதை கண்ட வேன் ஓட்டுநர் திடீர் பிரேக் அடித்ததில் வேன் நிலைதடுமாறி அருகில் இருந்த கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், பால் பாக்கெட்டுகள் வேறு வேனுக்கு மாற்றப்பட்டது.