வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக வயதான தம்பதி உயிர் தப்பினர். பெரியார் நகர் பகுதியில் முதிய தம்பதியான சுப்பிரமணி- ராணி வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் கனமழையால், இவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.