கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மது அருந்த பணம் கேட்டு தொல்லை செய்த கணவனை பூரிக்கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கடந்த 25ம் தேதி நந்தகுமார் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மனைவி சஹானா பேகம், பூரிக்கட்டையால் சரமாரியாக அடித்தார்.