கார்த்திகை தீபத் திருவிழா நெருங்குவதை முன்னிட்டு, தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் மண்பாண்ட தொழிலாளர்கள் வித விதமான அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்பை விட தற்போது அகல் விளக்குகள் தயாரிப்பது குறைந்து விட்டதாக கூறியுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், மண் கிடைப்பது சிரமமாக இருப்பதாகவும், வைக்கோல், மட்டை போன்ற மூலப் பொருட்களின் விலை உயர்வாலும், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அகல் விளக்குகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே விலையை பொருட்படுத்தாமல் பாரம்பரிய முறைப்படி கார்த்திகை தீபத்திற்கு அகல் விளக்குகளை வாங்கி விளக்கேற்ற வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.