மதுரை போடிலைன் பகுதியில் பால் வாங்க தண்டவாளத்தை ஒட்டி நடந்து சென்ற பெண்ணின் மீது ரயில் உரசியதில் அவரது கை துண்டானது. சுகன்யா என்ற பெண் ரயில்வே தண்டவாளம் பாதுகாப்பு கேட் அருகே நடந்து சென்றபோது, ரயில் அவரது கையின் மீது உரசியதில், கை சிதைந்தது. இதனை தொடர்ந்து அப்பெண் மீட்டுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குடியிருப்புகள் சூழ்ந்த பகுதிகளில் உள்ள தண்டவாளத்தை ஒட்டி பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.