கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளான 24-ஆம் தேதி அன்று பைக் ரேஸ் நடத்தப் போவதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதை அடுத்து கண்காணிப்புப் பிரிவு போலீசார் வீடியோக்களின் அடிப்படையில் இருசக்கர வாகன பதிவெண்களை வைத்து அதிவேகமாக வாகனம் ஓட்டிச் சென்ற நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.