திருச்சி... அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை. இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கொடூரம். இளைஞர் கொலை செய்யப்பட்டது ஏன்? கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்த இருவருக்கும் உயிரிழந்தவருக்கும் என்ன சம்மந்தம்?திருச்சி மாவட்டம், லால்குடி பக்கத்துல உள்ள கீழ மணக்கால் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். எம்.ஏ பட்டதாரியான இவரு அரசு நெல் கொள்முதல் நிலையத்துல தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளியா வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. அவருகூட அதே ஊரை சேர்ந்த கமலேசும் வேலை பாக்குறாரு. மூட்டை தூக்குறது வர்ற கமிஷனை பிரிக்கிறதுல ரெண்டுபேருக்குமே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்ருக்குது. இதுக்குமத்தியில கடந்த அக்டோபர் மாசம் தீபாவளியன்னைக்கு மதுபோதையில ரவீந்திரன்கிட்ட கமலேஷ் வம்பிழுத்திருக்காரு. அப்போ, ஆத்திரத்துல ரவீந்திரனும் அவரோட அண்ணன் ராகேஷ் பாபுவும் சேர்ந்து கமலேஷை பீர்பாட்டிலால தாக்கிருக்காங்க. கண்மூடித்தனமா தாக்குனதுல கமலேஷோட கையில 20 தையல் போட்ருக்காங்க மருத்துவர்கள். அது சம்மந்தமா ரவீந்திரன்மேலயும், அவரோட அண்ணன்மேலயும் வழக்குப்பதிவு பண்ணிருக்காங்க போலீசார். மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்த கமலேஷை பாக்க வந்த நண்பர்களும், சொந்தக்காரங்களும் குத்துன அண்ணனும் தம்பியும் எந்த பயமும் இல்லாம ஊருக்குள்ள சுத்திட்டு இருக்காங்க, சிகிச்சை முடிஞ்சி வந்ததும் அவங்க ரெண்டுபேரையுமே விடாதனு உசுப்பேத்தி விட்ருக்காங்க. அதேமாதிரி சிகிச்சை முடிஞ்சி வீட்டுக்கு வந்தபிறகும் கலமேஷ் அமைதியாவே இருந்துருக்காரு. ஆனா, விடாத சொந்தபந்தங்களும், நண்பர்களும் ரவீந்திரன் தைரியமா ஊர் சுத்துறானு சொல்லிட்டே இருந்துருக்காங்க. அதனால, கொந்தளிச்ச கமலேஷ் இனிமேலும் விடக்கூடாதுனு ரவீந்திரனை கண்காணிக்க ஆரம்பிச்சிருக்கான். எப்படா தனியா சிக்குவான்னு நேரம் பாத்து காத்துட்டு இருந்துருக்கான். அப்பதான், லால்குடியில உள்ள ஒரு ஓட்டல்ல சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்பிக்காரு ரவீந்திரன். அப்போ, தன்னோட நண்பர்கூடவே பைக்ல பின்தொடர்ந்துபோன கமலேஷ், கீழ மணக்கால பகுதியில உள்ள ரயில்வே கேட் கிட்டவச்சி கத்தியால குத்திக் கொலை பண்ணிருக்காரு.ஏற்கனவே ரெண்டுபேருக்குள்ளயும் உள்ள முன்விரோதம், பீர்பாட்டிலால குத்தினது, போலீஸ் கேஸ் ஆனது எல்லாமே ஊர்ல உள்ள எல்லாருக்குமே தெரியும் அப்டிங்குறதால போலீசார் விசாரிச்சப்ப ஊர் மக்களே நடந்தத எல்லாத்தையுமே சொல்லிருக்காங்க. அடுத்து, கொலை செஞ்சிட்டு தப்பி ஓடுன கமலேஷையும், அவர்கூட வந்த நண்பரையும் தேடுற வேலையில இறங்கிருக்காங்க. அப்போ, நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் கமலேஷ் சுத்திட்டு இருக்குறதா போலீசுக்கு ஒரு தகவல் கிடைச்சிருக்குது. அங்கபோன போலீசார் கமலேஷை சுத்தி வளைச்சி கைது பண்ணி சிறையில தள்ளிட்டாங்க.