நாகையில் ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மினி வேனை திருடி சென்ற நபரை இரண்டு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். அந்தனப்பேட்டை பகுதியை சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான மினி வேனை நாகை ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்து விட்டு வந்து பார்த்தபோது, மினி வேன் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த அருள் பிரகாஷ், நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், கீழையூர் அருகே சீராவட்டம் என்ற பகுதியில் மினி வேனை திருடி சென்ற மணிவேல் என்பவரை கைது செய்தனர்.