நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகள் திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். ஜீவா மற்றும் வடிவேலு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மின் கம்பிகளையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.