ஜாக்கெட் தைக்க கொடுப்பதற்காக பெண் டெய்லர் வீட்டிற்கு வந்த இளம்பெண். கோயில் பிரசாதம் எனக்கூறி மயக்க மருந்து கலந்த பால்கோவை கொடுத்து தாலிச்செயினை திருடி கேடி வேலை. பெண்களிடம் பேசிப்பழகி பால்கோவா கொடுத்து நகைகளை திருடும் கேடிலேடி சிக்கினாரா? பின்னணி என்ன?சென்னை, திருவல்லிக்கேணி சின்னப்பா தெருவை சேர்ந்த மாலத்திரி-சுஜாதா தம்பதி. வீட்ல தையல் மிஷின் வச்சி தச்சிட்டு டெய்லரிங் வேலை பாத்துட்டு இருக்காங்க சுஜாதா. அதனால, துணி தைக்க குடுக்குறதுக்காக வீட்டுக்கு நிறைய பெண்கள் வர்றது வழக்கம். அப்படிதான், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆர்னிப்பள்ளி ரவணம்மாங்குற பொண்ணு ஜாக்கெட் தைக்கிறதுக்காக வந்துருக்காங்க. சுஜாதா கிட்ட நல்லா பேசின ரவணம்மா தான் ஆந்திராவுல உள்ள ஒரு கோயிலுக்கு போனதாகவும், அங்க பிரசாதமா குடுத்தாங்கனும் பால்கோவா குடுத்துருக்காங்க. சாமி பிரசாதம்னு சொன்னதும் எந்த மறுப்பும் சொல்லாம அத வாங்கி சாப்ட்ருக்காங்க சுஜாதா. அத சாப்பிட்ட சிலநிமிஷத்துலயே அவங்க மயங்கி சரிஞ்சதும் கழுத்துல கிடந்த 6 சவரன் தாலி செயினை திருடிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க திருட்டு ரவணம்மா. இந்த சம்பவம் நடந்த சிலமணிநேரம் கழிச்சி வீட்டுக்கு வந்த கணவன் மயங்கி கிடந்த மனைவிய எழுப்பிருக்காரு. அதுக்குப்பிறகுதான் தாலிச்செயின் திருடுபோனது தெரிஞ்சிருக்குது. அடுத்து ரெண்டுபேரும்போய், ஜாம் பஜார் காவல் நிலையத்துல புகார் குடுத்துருக்காங்க. அதுக்குப்பிறகு, வழக்குப்பதிவு பண்ணின போலீசார் சம்பவம் நடந்த சாலைகள்ல இருந்த சிசிடிவி கேமராக்களை செக் பண்ணிருக்காங்க. அதுல, அந்த பொண்ணோட அடையாளத்த காட்டிருக்காங்க சுஜாதா. அடுத்து, சென்னையில உள்ள காவல் நிலையங்களுக்கும் போட்டோவ அனுப்பி விசாரணையில இறங்குன போலீசார் திருவல்லிக்கேணி அரிசி மண்டி தெருவுல உள்ள அவங்க வீட்டுக்கேப்போய் அரெஸ்ட் பண்ணிருக்காங்க. அதுக்குப்பிறகு ரவணம்மாக்கிட்ட நடத்துன விசாரணையில, அவங்களோட வேலையே பால்கோவா குடுத்து நகைகளை திருடுறதுதான் அப்டிங்குறது தெரியவந்துச்சு. ஆந்திராவை சேர்ந்த ரவணம்மா கடந்த 10 வருஷத்துக்கு முன்னால சென்னைக்கு வந்து தங்கி சித்தாள் வேலை பாத்துருக்காங்க. ஆன்லைன் கேம்ல அதிக ஆர்வம் கொண்ட திருட்டு ரவணம்மா அதனால பணத்தையும் இழந்துருக்காரு. தான் உழைக்கிற பணத்தை மட்டும் இழக்காம கடன் வாங்கியும் ஆன்லைன் கேம்ல இழந்த ரவணம்மாக்கிட்ட கடன்காரர்கள் பணத்தை கேட்டு நச்சரிச்சிருக்காங்க. அந்த கடனை அடைக்க பல இடங்கள்ல பணம் கேட்டு அலைஞ்ச இவங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சிருக்குது. அதனால, வெக்ஸ் ஆன ரவணம்மா நூதன முறையில திருட பிளான் பண்ணிருக்காங்க. அதுதான், கோயில் பிரசாத பால்கோவா பிராசஸ். தெருவுல உள்ள எல்லா பெண்கள்கிட்டயும் நெருங்கி பழகுன ரவணம்மா அவங்ககிட்ட நகைகள் எத்தனை சவரன் இருக்குதுனுகூட கேட்டு தெரிஞ்சி வச்சிப்பாங்க. அடுத்து, மயக்க பால்கோவாவ குடுத்து அந்த நகைகளை எடுத்துட்டு எஸ்கேப் ஆகிருவாங்க.அப்படிதான், தன் வீட்டு பக்கத்துல உள்ள கொடியரசிங்குற பொண்ணுக்கிட்ட பேசிப்பழகி நகைகள் பத்தி விவரத்தை தெரிஞ்சிக்கிட்ட ரவணம்மா பீரோ சாவியை திருடி 21 சவரன் நகைகளை திருடிருக்காங்க. 20 நாளா போலீசார் கண்ணுல சிக்காத திருட்டு ரவணம்மா அடுத்து பால்கோவாவுல மயக்க மருந்து கலந்து வேற ஒரு பொண்ணுக்கிட்ட நகையை திருடிருக்காங்க. அந்த நகையை அடகு கடையில போய் 8 லட்சத்துக்கு வித்து அதவச்சி ஆன்லைன்ல கேம் ஆடிருக்காங்க. அடுத்து, போலீசாரோட விசாரணையில ரவணம்மாவோட கேடிவேலை வெளிச்சத்துக்கு வந்துருக்கு. ஆனாலும், திருந்தாம சுஜாதா வீட்டுக்கு ஜாக்கெட் தைக்கிற மாதிரி வந்து தாலிசெயினை திருடிட்டு போயிருக்காங்க. ரவணம்மாக்கிட்ட இருந்து 20 சவரன் நகைகளை பறிமுதல் செஞ்ச போலீசார் இதுவரைக்கும் எத்தனை பெண்கள்கிட்ட கைவரிசை காட்டிருக்காங்க? அந்த நகைகளை எல்லாம் எங்க வித்தாங்க? ரவணம்மா மட்டும்தான் இந்த திருட்டு வேலைய செய்யுறதா? இல்ல இவங்களுக்கு பின்னால பெரிய டீம் ஏதாவது இருக்குதானு தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - ரூ.2 கோடி நகையுடன் சிறுவன் தப்பி ஓட்டம்