திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பெரிய குடைவரை கோவிலான வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்த நிகழ்ச்சியில், உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சரவணப்பொய்கை குளத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.