தருமபுரி அருகே பாதை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத வருவாய் துறை நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் தங்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை அலுவலக வாசலில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வழிப்பாதை பிரச்சனை இருந்து வரும் நிலையில், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.