ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த மரவெட்டி கிராமத்தில் மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்களின் வழியே தூக்கி செல்லும் அவல நிலை நீடித்து வருகிறார். இதனால் மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.