தமிழ்நாட்டில் திமுக 7 முறை ஆட்சி அமைத்தும் கூட்டணி ஆட்சி என்பதே கிடையாது என அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்துாரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் அரசியல் கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு எந்த பாதிப்புமும் இல்லை என்றும், திமுக யாரைப் பார்த்தும் அஞ்சாது எனவும் கூறினார். மேலும் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் தான் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும், அவர்கள் பதவியை விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.