பல்கலைக்கழகங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் சகிப்புத்தன்மையே இருக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மாணவிகளை தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளும் பொருளாக பார்க்கக்கூடாது என எச்சரித்துள்ளது. இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில்,தனக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு அளித்த பல்கலைக்கழக உத்தரவை, தனிநீதிபதி ரத்து செய்து, அவருக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் பேராசிரியர் மனுவை தள்ளுபடி செய்து மாணவிக்கு 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.