தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைச்சர் கோவி. செழியன் கலந்துகொண்ட கூட்டுறவு வார விழா மேடையில் கூட்டுறவு சங்க அலுவலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பேசிக் கொண்டிருந்த போது, தஞ்சாவூர் கூட்டுறவு சங்க அலுவலர் செல்வராஜன் என்பவர் மது போதையில் மேடையில் தள்ளாடியபடி கை தட்டுவதும், கையை உயர்த்தி உற்சாகப்படுத்துவதுமாக நின்றார். மேலும், அலுவலர்கள் வெளியேற்ற முயன்றபோதும் முரண்டு பிடித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.