தமிழ்நாட்டில் வேரூன்றப் பார்க்கும் சனாதன சக்திகளுக்கு சிலர் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார்கள் என சீமான் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக குற்றம்சாட்டினார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், இந்தியாவில் இன்னும் சனாதனமே இயங்கி வருவதாகவும், சாதி பார்க்காமல் எந்த செயலும் இல்லை எனவும் கூறினார்.