மார்கழி முதல் நாள் தொடங்கி இன்று வரை பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாதம் முதல் இன்று வரை நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் மார்கழி மாத முக்கிய நிகழ்வான ஆண்டாள் திருமண வைபவம் இன்று ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண்டாள் பெருமாளுக்கு சிறப்பு பொருட்களா அபிஷேகம் நடைபெற்ற தொடர்ச்சியாக பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு பட்டாடை உடுத்தி, திருமண கோலத்தில் காட்சி அளித்த சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் வேத மந்திரம் கூறிய பிறகு மேள தாளங்கள் முழங்க, ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், பால்பழம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சுவாமியை மனமுருகி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கன்னியா பரமேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.இதையும் படியுங்கள் : அவனியாபுரத்தை கலக்கிய பாலமுருகனுக்கு