ஓட்டு வங்கிக்காக விசிக தலைவர் திருமாவளவன் எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார். சென்னை வேளச்சேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர்கள் பட்டியலின மக்களை உதாசினப்படுத்தி வேற்றுமையை விதைப்பதாகவும், ஆனால் பாஜக ஒற்றுமையை விதைப்பதாகவும் தெரிவித்தார்.