கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியில் உள்ள ஐய்யப்பன் கோயிலில் ஆண்டுதோறும் தொடர்ந்து மகர ஜோதி தரிசன வழிபாடு நடைபெற்று வருகிறது இன்று மாலை 21ஆம் ஆண்டு திருவாபரணப்பெட்டிகள் ஊர்வலம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் கருப்பசுவாமிகள் ஆட்டங்கள் ஆடியபடி, சரண கோஷத்துடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட ஆபரணப்பெட்டியில் உள்ள ஆபரணங்களை கொண்டு, அய்யப்ப சுவாமியை அலங்கரித்து, தொடர்ந்து சபரிமலையில் மகரஜோதி தெரிந்த அதே நேரத்தில் இங்கு திருக்கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்து மிகப்பெரிய கொப்பரையில் பெரிய பெரிய கற்பூர கட்டிகளில் மகரஜோதி ஏற்ற, திருக்கோயில் உள்ளே இராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த அய்யப்பசுவாமிக்கு விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா