தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் படைவெட்டி மாரியம்மன் கோயில் 136 ஆம் ஆண்டு திருவீதியுலா திருநடன மஹோஸ்தவ விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் மங்கல வாத்தியங்கள் முழங்க பச்சை காளி மற்றும் பத்தரகாளி திருநடனம் நடந்த பின், இரு காளிகளும் அடுத்தடுத்து ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.