எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தான் திமுகவுக்கு கடைசி தேர்தல் என தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் உறுதிபட தெரிவித்தார். என்டிஏ பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது:பிரதமர் மோடி என்ன பேசப்போகிறார் என நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். பிரதமர் மோடி, இந்த மண்ணில் காலடி வைத்ததும் சூரியன் மறைந்துவிட்டது. மக்கள் வெள்ளத்தால் மதுராந்தகம் சூழப்பட்டு உள்ளது. நம்மை எதிர்ப்பவர்கள் எத்தைகய வஞ்சக எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அந்த தருணம் இப்போது கிடைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த நான்கே முக்கால் ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த காலத்தில் மக்களுக்கு துன்பம், வேதனை மட்டுமே கிடைத்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஊழல். மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி குடும்பம் சுரண்டப்படுவது நியாயமா?திமுகவுக்கு இறுதி தேர்தல்இந்த தேர்தல் தான் திமுகவுக்கு இறுதி தேர்தல், திமுகவை வீழ்த்துவோம். பிரதமர் நமக்கு துணை நிற்கிறார். நமது இயக்கம் வலிமையான இயக்கம். நமது கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. இந்த தேர்தலை பொறுத்தவரை குடும்ப வாரிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சிக்கு முடிவு வைக்கும் தேர்தல். நமது வெற்றிக்கு மக்கள் துணை நிற்கின்றனர். நமது கூட்டணி கட்சியினர் எழுச்சியோடு உயைாற்றுகின்றனர். 210 இடங்களில் வெற்றிநமது கூட்டணி 210 இடங்களில் வெல்லும். பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். இன்று தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்கவில்லை என தவறான தகவலை சொல்கிறார். அதிமுக ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்கள் பெற்றோம். கேட்ட நிதி, திட்டங்களை கொடுத்தார்கள். அதிகமான மேம்பாலத்தை கொடுத்தது மத்திய அரசு. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளை வழங்கினார்கள். மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2க்கு அனுமதி பெற்று 63 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதி வழங்கியது. அதற்கு மத்திய அமைச்சர் நேரடியாக அடிக்கல் நாட்டினார். இது மத்திய அரசு வழங்கும் திட்டம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம்அதிமுக அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தது. நிறைய திட்டத்தை கொடுத்தனர். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசை எதிர்க்கின்றனர்; பெரும் ஊழல் செய்கின்றனர். உலக தலைவர்கள் பாராட்டும் வகையில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். Related Link தங்கத்தின் விலை மேலும் உயர்ந்தது