இருமொழிக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தி, தேசிய சராசரியை விட தமிழகம் சிறந்து விளங்கும் போது, முழுவதும் தோல்வி அடைந்த மும்மொழிக் கொள்கையை திணிப்பதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அறிவு இருப்பவர்கள் யாராவது மும்மொழி கொள்கையை ஏற்பார்களா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.