சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரைக்காடு சோதனைச்சாவடியில் சுற்றுலாப் பயணிகளை தாக்கிய சம்பவத்தில் 3 காவலர்கள், பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள மாதேஷ்வரன் கோவிலுக்கு வந்த பேருந்து மேட்டூர் வழியாக சென்ற போது, தமிழக எல்லையான காரைக்காடு சோதனைச்சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காவலர்களுக்கும், ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சம்பவத்தன்று பணியிலிருந்த 3 காவலர்களை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.