மானை வேட்டையாடி சாலையில் இழுத்துச் சென்ற புலி குறித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த தமிழக-கேரள எல்லையான சாலக்குடி அதரப்பள்ளி செல்லும் சாலையின் ஓரத்தில் புலி ஒன்று மானை வேட்டையாடி, சாலையில் இழுத்துச் சென்ற காட்சியை அவ்வழியே சென்ற சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்தனர். இந்தக் காட்சி, வலை தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதரப்பள்ளி பகுதியில் யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் சாலையில் நடமாடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.