திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே பைக்கின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், மின்வாரிய ஊழியரும்,14 வயது சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஊரணம்பேடு கிராமத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஜோதி என்பவர் தனது பைக்கில் அவரது சகோதரியின் மகனை அழைத்து கொண்டு பட்டமந்திரி- வல்லூர் ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது.