கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். குறிப்பாக மோயர் சதுக்கம், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன்மரக்காடுகள், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.